Translate

சனி, 5 மே, 2018

சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்ட 2,200 ஆண்டுகால முருகன் கோயில்!மாமல்லபுரத்துக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான முருகன் கோயில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு கல்லினால் ஆன வேல் உடைக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் கடவுள் முருகன். முருகனின் கோயில் தமிழகம் முழுவதும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முருகன்கோயில் சங்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே அதன் அமைப்பு மாறாமல் மாமல்லபுரத்துக்கு அருகில் சாலவன்குப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்துக்கு ஆதாரமாக இருந்த கோயில் 'சாலவன் குப்ப முருகன் கோயில்' மட்டுமே. இக்கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதம் செய்யப்பட்டுள்ளதை நேற்று கண்டறிந்திருக்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள் .
கோயில் சிதைவடைவதற்கு முன்
ஏற்கெனவே காற்று, மழை என்று இயற்கைக் காரணிகளால் சேதமடைந்திருந்த கோயிலில் சங்ககால கட்டுமானத்துக்குஅடையாளமாக அதன் அடித்தளம் மற்றும் முற்கால பல்லவர் காலத்தில் நடப்பட்டிருந்த கல்லினால் வேல் மட்டுமே எஞ்சி இருந்தது. கோயிலுக்கு முன் நடப்பட்டிருந்த கல் வேலும் இப்போது பிடுங்கி உடைக்கப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மாமல்லபுரத்துக்கு அருகில் இருக்கிறது சாலவன் குப்பம் கிராமம். இங்குப் பல்லவர் கால புலிக்குகை மற்றும் அதிரணசண்டேசுவரம் எனும் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இவற்றுக்கு அருகில் இருக்கிறது முருகன்கோயில். இக்கோயில் 2004 -ம் ஆண்டு வரை மண்ணுக்குள் புதைந்திருந்தது. சுனாமியில் ஏற்பட்ட மண் அரிப்பில் வெளிப்பட்டது இக்கோயில். இதற்கு முன்பே அப்பகுதியில் 1972 -ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று 'முருகன் கோயிலுக்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கொடுத்த நிவந்தம்' பற்றித் தெரிவிக்கிறது. அக்காலம் முதலே தேடப்பட்ட முருகன் கோயில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் வெளிப்பட்டது.
சங்ககால கோயில் கட்டுமானம் எப்படி இருக்கும் என்பதற்கு ஆதாரமாக இருந்தது அக்கோயிலும், கல் வடிவ வேலும். ஆனால், இப்போது அந்த வேலும் துண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது.
சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்ட 2,200 ஆண்டுகால முருகன் கோயில்!
சிதைக்கப்பட்ட பல்லவர்கால முருகன் வேல்
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், உடைக்கப்பட்ட வேலினைப் பார்த்து தகவல் கொடுத்த மாணிக் ராஜேந்திரனைத் தொடர்புகொண்டபோது, "சங்ககால முருகன் கோயில் சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. மக்கள் நம் பாரம்பர்ய தொன்மைச் சின்னங்கள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் விழிப்பு உணர்வை அடைந்தால் மட்டுமே நம் பழைமையைக் காக்க முடியும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
கோயிலின் தற்போதைய நிலையைப் பற்றி விசாரிக்கையில் தொல்லியல் துறையினர் கோயிலைப் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். விரைவில் உடைக்கப்பட்ட வேலினை ஒன்று சேர்த்து ஒட்டி விடுவதாகக் கூறியிருக்கிறார்கள். சங்ககால முருகன் வேலினை பழையபடி ஒன்று சேர்த்து மீண்டும் நடப்பட வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.
மேற்கொண்டு சமூக விரோதிகள் சேதப்படுத்தாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

புதன், 28 பிப்ரவரி, 2018

திங்கள், 12 பிப்ரவரி, 2018

அந்தகாலத்திய கவலை [கமலை ] பாசனம்


அன்புடையீர் !
வணக்கம் .அன்பர் சென்னை சேவாஸ் பாண்டியன் அவர்கள் பதிவில் '' கமலை இறைத்தல் '' பற்றி குறிப்பிட்டு ,கீழ்வரும் கருத்தையும் பதிவிட்டிருந்தார் .
'' பழங்காலத் தமிழர் நீர் இறைக்கும் முறையாம், ஏற்றம் இறைத்தல் மற்றும் கமலை இறைத்தல் குறித்த தகவலோ, படங்களோ இணையத்தில் ஏதுமில்லை ''.
அடியேன் , என்னுடைய சிறுவயதில் எங்களது தோட்டத்தில் கமலை ஏற்றத்தின் கயிறுகளில் அமர்ந்து செல்வதை ஒரு விளையாட்டாகவே விளையாடியுள்ளேன் ,குத்தகைதாரர் அமரர் மாரப்பக் கௌடர் எவ்வாறு அமர்ந்து நீர் இறைப்பது என்பது பற்றி சொல்லிக் கொடுத்தது பசுமையாக நினைவில் உள்ளது .
கீற்று இணையதளத்தில் அன்பர் எழுத்தாளர்: .சிவசுப்பிரமணியன் அவர்கள்எழுதிய கட்டுரையிலிருந்து ======
மின்சாரத்தால் இயங்கும் நீர் இறவை யந்திரம் அறிமுகமாகும் முன்னர் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவைப்படும் அதிக அளவிலான தண்ணீரைக் கிணறுகளில் இருந்து இறைக்கப் பயன்பட்ட கருவிகவலை’ (கமலை) ஆகும்.
இரண்டு மாடுகளின் துணையுடன் கவலை அல்லது கமலையால் நீர் இறைப்பர். ஒரு மணிக்கு இரண்டாயிரம் கேலன் அல்லது 9092லிட்டர் தண்ணீரை, கவலையைப் பயன்படுத்தி இறைக்க முடியும்.
இதை நம் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின் அடையாளம் எனலாம். கிணற்றினுள் நீரை முகக்கவாய் அகன்ற அண்டா போன்ற அமைப்புடைய கலன் பயன்பட்டது. இது உலோகம் (பெரும்பாலும் துத்தநாகத் தகடு) அல்லது தோலால் செய்யப்பட்டிருந்தது. இதுவேபறிஎன்று கொங்குப் பகுதி யிலும், ‘கூனைஎன்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்பட்டது. தோலால் ஆன பறியே கொங்குப் பகுதியில் பரவலாக வழக்கில் இருந்துள்ளது.
பறியின் அடிப்பகுதியானது வாய்ப்பகுதியைவிடச் சிறிய அளவிலான துவாரத்தைக் கொண்டிருக்கும். இதன் வழியாகவே பறியிலுள்ள நீர் வெளியேறும். நீருடன் கிணற்றில் இருந்து மேலே வரும் பறியில் உள்ள தண்ணீர் கிணற்றுள் விழுவதைத் தவிர்க்கவும், கிணற்றின் தொட்டியில் அது முழுமையாக விழவும்தும்பிஎன்ற பெயரிலான தோலால் செய்யப்பட்ட உறுப்பு பறியின் அடிப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும். தென்மாவட்டங்களில் இதை வால் என்பர். இதன் வாய்ப்பகுதியும் அடிப்பகுதியும் மேலும் கீழும் தைக்கப்படாத நீண்ட பை போன்று இருக்கும்.
தண்ணீருடன் கூடிய பறியைக் கவலை மாடுகள் உயரே இழுக்கும்போது தும்பியின் வழியாக நீர் கொட்டுவதைத் தடுக்க அதன் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் கயிறு கட்டுவர். இக்கயிறு தும்பி மேலே வந்தவுடன் தளரும் வகையிலும் கிணற்றிலிருந்து மேலே வரும்போது தும்பியின் அடிப் பகுதியை இறுக்கும் வகையிலும் கட்டப்பட்டிருக்கும்.
இக்கயிறுதும்பிக்கயிறுஎன்று கொங்கு வட்டாரத்திலும்,‘வாலக்கயிறுஎன்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்படும். இக்கயிறு கட்ட தும்பியின் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் துவாரம் இருக்கும். இது தும்பிக்காது எனப்படும்.
தோலால் ஆன பறியில்,அதன் அடிப்பகுதியுடன் தும்பியானது இணைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இதனால் உலோகத்தாலான பறியில் தும்பியை இணைத்துக் கட்டுவதுபோல் கட்டவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாகப் பறியைப் பயன் படுத்துவதால், பறியிலும், தும்பியிலும் சிறு பொத்தல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றின் வாயிலாக நீர் சிந்தி வீணாவதைத் தடுக்க, ‘பற்றாசுஎன்ற பெயரிலான துண்டுத்தோல்களைப் பயன் படுத்தித் தைப்பது அவசியமான ஒன்றாகும்.
கவலையின் முக்கிய உறுப்புகளான பறியும் தும்பியும் தோலால் செய்யப்படுவதால் இவற்றை உருவாக்குவதிலும் பழுதுபார்ப்பதிலும் தோல் தொழிலாளர்களான மாதாரியரின் பணி தவிர்க்க முடியாத ஒன்றாகும். பறி தொடர்பான தொழில் நுட்பத்தில் இவர்கள் மட்டுமே வல்லவர்களாய் இருந்தனர்.
நன்றி====
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இறைக்க மிகவும் பழமையான முறையை பின்பற்றி விவசாயம் செய்யும் மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பன் என்ற கருப்பையா(78)
==புகைப்படங்களுக்கு நன்றி ===Subramaniya InfoPlace blog .

நன்றி   

சனி, 13 ஜனவரி, 2018

ஓலைச்சுவடி முதல் தொகுதி pdf 1முதல் 7வரை

     இந்த போகியில் பல சுவடிகள் எரித்து போகி கொன்டாடினர் சில மடத் தமிழர் அந்த நாளில் இந்த ஏழு கட்டு சுவடியையும் வலையில் பதிவேற்றுவது மகிழ்சியாக உள்ளது

இந்த  இனைப்பில் சென்று தரவிரக்கவும் 1முதல் 7 வறையான சுவடி கட்டுகள் இன்னும் சில உள்ளது அடுத்து சில வாரங்களில் வெளியிடுவோம்.


https://drive.google.com/open?id=1S5JbiAo8cMkZE-Khe0U3kXhWoGyDaDIoஇந்தச் சுவடிகள் இன்னும் படிக்க வில்லை இந்தச் சுவடியில் உள்ளதை யாருக்காவது படிக்க முடிந்தால் எங்களுக்கு அந்தத் தகவலை தெரிவிக்கவும் பல ஆண்டுகளாகப் பாதுகாத்து மட்டும் வைத்திருந்தது யாராவது படித்து கூறவும் 

செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஓலைச்சுவடி முதல் தொகுதி pdfபோகி அன்று வெளியிடப்பட்டது 13/01/2018

இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கவும்

http://veerappandi.blogspot.in/2018/01/pdf-1-7.html?m=1